Posts

Showing posts with the label NGK Tamil Movie

சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் வெளியான NGK இத்தனை கோடி நஷ்டமா.? - ரசிகர்கள் ஷாக்

Image
செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த என்ஜிகே படம் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்தது. படம் வெளியான அன்றே எதிர்பார்த்தபடி படம் இல்லை என விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் படக்குழுவினர் படத்தை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும், பொறுமையாகப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் தெரிவித்தனர். முதல் நாளுக்குப் பிறகு படம் நன்றாக போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பரப்பினார்கள். மூன்று நாளில் உலகம் முழுவதும் 60 கோடி வசூலித்தது என்று சிலர் ஆதாரமற்ற செய்திகளைப் பரவ விட்டார்கள். திரையுலகில் விசாரித்ததில் மூன்று நாளில் உலகம் முழுவதுமே 25 கோடி வரைதான் வசூலித்திருக்கும் என்றார்கள். சுமார் 80 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 50 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தைக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்தார்கள். இந்நிலையில் தெலுங்கில் சுமார் 9 கோடி வரை விற்கப்பட்ட படம் 3 கோடி வரையில் மட்டுமே இதுவரை வசூல் செய்துள்ளதாம். அங்கு பெரிய தோல்வியை நோக்கி படம் போய்க் கொண்டிருப்பதாகவும் சுமார் 5 கோ...

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் NGK - போட்டு உடைத்த முன்னணி நடிகர்..!

Image
வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனர் செல்வராகவன். மிகவும் அட்வான்ஸாக இவரது திரைப்படங்கள் இருப்பதால் அவை ரசிகர்களிடையே சென்று ரீச் ஆவதற்கு சில காலம் எடுக்கும். புதுப்பேட்டை படத்தை தற்போது தான் அனைத்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த படம் தான் NGK. சூர்யாவின் நடிப்பில் வெளியாகியிருந்த இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலா சிங் நடித்திருந்தார். படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பாலா சிங் கூறுகையில், இப்படத்தில் நடித்த போது புதுப்பேட்டையில் தெரிந்த பாலா இந்த படத்தில் எந்த இடத்திலும் தெரிய கூடாது, புதுசாக தெரியணும் என்று சொன்னார், செல்வராகவன். அவர் என்ன சொல்லி கொடுத்தாரோ, அதை மட்டும் செய்தேன். புதுப்பேட்டை-2 மாதிரிதான் இந்தப் படம் என்று சொன்னார், அப்படித்தான் NGK வந்திருக்கு. படத்தில் என் கெட்டப் எம்.ஜி.ஆர் சாயல் இருக்கணும் என செல்வராகவன் சொல்லியிருந்தார். அதனால்தான், அதேமாதிரி கண்ணாடி, தொப்பி எல்லாம் போட்டுக்கிட்டேன் என்கிறார், பாலா சிங்.     Summary in English ...

"சூர்யாவிற்கும், ராகுல் பரீத் சிங்-கிற்கும் ஓட்டல் ரூமில் ஏதாவது நடந்ததா..?" - ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில்

Image
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த வாரம் என்ஜிகே படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் முதல் நாள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அதை தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது நாட்களில் படம் ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது, இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் ஹோட்டல் ரூம் ஒன்றில் சூர்யாவும், ராகுலும் தனியாக சந்தித்துக்கொள்வார்கள்.   இதுக்குறித்து ரோகினி தியேட்டரில் ஆடியன்ஸ் விமர்சன பலகையில் ஒருவர் 'இருவருக்குமிடையே ஏதும் நடந்ததா?' என கிண்டலாக கேட்டார். அதற்கு செல்வராகவன் 'ம்ம்...அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது அந்த ஹோட்டல் ரூம் இரண்டாம் பாதி காட்சியிலேயே இருக்கும் இன்னும் தேடுங்கள்' என்று பதில் அளித்துள்ளார். Mm. Interesting! Is there "something" between NGK and Vanathi? The answer lies in the scene where NGK meets vanathi in her hotel room in the second HALF. Keep decoding! #NGK #NGKFIRE https://t.co/bxVoipGmqG — selvaraghavan (@selvaraghavan) June 3, 2019

NGK - முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா..?

Image
செல்வராகவன் படங்கள் எல்லாம் தனியாக தெரியும். பட ரிலீஸை தாண்டி பல வருடங்கள் கழித்து தான் அவரது படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.  அவரது இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் NGK. ஆரம்பத்தில் இப்படத்திற்கு சரியான விமர்சனம் வரவில்லை என்றாலும் இப்போது தான் ரசிகர்கள் படத்தை புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.  சென்னையில் முதல் நாளில் ரூ. 1 கோடிக்கு வசூலித்துள்ள இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 10க்கு மேல் வசூலித்துள்ளதாம். ரசிகர்கள் படத்தை புரிந்துகொண்டு வர வரும் நாட்களில் படத்தின் வசூலில் நல்ல மாற்றம் இருக்கும் என்கின்றனர்.

வெந்த புண்ணில் வேலை பாய்சிடாங்களே..! - சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி..!

Image
சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் சூர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளனர்.  படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் என்ஜிகே திரைப்படம் திருட்டுத் தனமாக வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே கலவையான விமர்சனங்களால் படம் வெற்றி அடையுமா என சிந்தனையில் இருக்கும் படக்குழு, தமிழ்ராக்கர்ஸின் இந்த வேலையால் வசூல் பாதிக்கப்படும் என்ற நிலை உருவாகி உள்ளது. வெந்த புண்ணில் வேலைபாய்ச்சிடாங்களே என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.

தல, தளபதி ரசிகர்களை மிஞ்சிய சூர்யா ரசிகர்கள்..! - அடேங்கப்பா..! - NGK படத்திற்கு என்ன செய்துள்ளார்கள் பாருங்க..!

Image
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் ரசிகர்கள் எப்படி மாஸ் காட்டுவார்கள் என்று நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அடுத்து தமிழில் வரப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது சூர்யாவின் NGK படம் தான். செல்வராகவன்-சூர்யா முதன்முதலாக இணைந்திருக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. அரசியல் களத்தில் தயாராகியுள்ள இப்படத்திற்கு யுவன் தெறி இசை போட்டுள்ளார், BGM செமயாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம். இப்பட ரிலீஸை தொடர்ந்து சூர்யாவின் NGK படத்திற்கு ரசிகர்கள் பெரிய ஏற்பாடுகள் செய்துள்ளனர். தற்போது ஒரு பெரிய கட்-அவுட்டின் வேலைகளும் நடந்து வருகிறது. அந்த கட்-அவுட்டை பார்த்தே ரசிகர்கள் பெரிய ஆச்சரியத்தில் உள்ளனர். தல, தளபதி ரசிகர்கள் செய்த மாஸ் காட்டினாலும் சூர்யா ரசிகர்கள் பெரிதாக செய்ய இருக்கிறார்களாம்.