Posts

Showing posts with the label film postponement

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு! டிக்கெட் புக் செய்தவர்கள் இதை கட்டாயம் பண்ணிடுங்க! வெளியான அறிவிப்பு!

Image
நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் கடைசி திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் ஜனநாயகன் ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்பட்டதால், படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் ஜனவரி 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என அறிவித்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தை டிசம்பர் 18ஆம் தேதி தணிக்கைக்கு சமர்ப்பித்த படக்குழு, சிறிய மாற்றங்களை செய்து டிசம்பர் 24இல் மீண்டும் அனுப்பியது. டிசம்பர் 29இல் U/A சான்றிதழ் வழங்கப்படும் என தகவல் வந்த நிலையில், ஜனவரி 5இல் திடீரென ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத சம்பந்தமான புகாரும், ராணுவ சின்னங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டது என்பதும் காரணமாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், CBFC தரப்பில் வெளியீட்டு தேதியை வைத்து அவசரப்படுத்த முடியாது என வாதிடப்பட்டது. தீர்ப்பு ஜனவரி 9இல் வருவதால், உடனடியாக சான்றிதழ் கிடைத்தாலும் ...