Posts

Showing posts with the label medical council review

8 மாதம் கழித்து 5 வயது சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு போஸ்ட் மார்ட்டம்! பகீர் கிளப்பும் மறைக்கட்ட ரகசியம்!

Image
சென்னை : அம்பத்தூர் தேஜா ஹாஸ்பிடல்லில் சாதாரண காய்ச்சல் புகாருடன் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமி நெஸ்லின் ரியா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்து 8 மாதங்கள் கழித்து இப்போது சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு போஸ்ட் மார்ட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் மருத்துவ அலட்சியம் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமி நெஸ்லின் ரியாவுக்கு டிசம்பர் 2-ம் தேதி மைல்ட் ஃபீவர் ஏற்பட்டது. குடும்பத்தினர் உடனடியாக அம்பத்தூர் தேஜா ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர்.  அந்த மருத்துவமனையில் தான் குழந்தை பிறந்தது மட்டுமல்லாமல், குடும்பத்தின் பெரிய டாக்டரும் அங்கு பிறந்தவர் என்பதால் முழு நம்பிக்கையுடன் அங்கு அழைத்துச் சென்றதாக தாய் ஜிஷா தெரிவித்தார். மருத்துவர் பரிசோதித்து, “டூ டேஸ் ஃபீவர் இருக்கு. மைல்ட் தான். இன்று சப்போர்டிவ் ட்ரீட்மெண்ட் கொடுத்து அனுப்புகிறோம். நாளை ஃபீவர் தொடர்ந்தால் வரவும்” என்று கூறியதாகவும், அதன்படி வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஜிஷா கூறினார். அடுத்த நாள் நிலைமை மோசம...