ஐட்டம், டிக்கெட்-ன்னு சொல்லி அந்த உறுப்பை பிடிச்சு.. பொள்ளாச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் பாலியல் கொடுமை.. மாணவி ஆடியோ
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கிணத்துகடவு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகள், இசை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் தாவரவியல் ஆசிரியர் பாலு உள்ளிட்ட ஆசிரியர்கள் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் கல்வித்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் அதிர்ச்சி வாக்குமூலம் மாணவி ஒருவர் அனுப்பிய ஆடியோவில், "எங்க மியூசிக் சார் செல்வராஜ், நடன பயிற்சியின்போது இடுப்பை பிடித்து தவறாக நடந்து கொள்கிறார். பாட்டனி சார் பாலு, ஊக்குவிப்பதாகக் கூறி முதுகைத் தடவுவதும், தொடையில் கை வைப்பதும், தட்டுவதுமாக இருக்கிறார். இதை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. 10-ம் வகுப்பு பிராக்டிகல் தேர்வில் கை வைப்பார்களோ என்ற அச்சம் உள்ளது," என்று வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், முந்தைய ஆண்டுகளில் இதே பள்ளியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாகவும், சீனியர் மாணவிகள் எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலரின் குற்றச்சாட்டு நேதாஜ...