ஆண்டுக்கு 26,000 ரூபாய் திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
திமுக மீண்டும் ஆட்சியமைத்தால், பெண்களுக்கு மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பை தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதன்மூலம், தகுதியான பெண்களுக்கு வருடத்திற்கு ரூ.24,000 (மாதம் ரூ.2,000 × 12) கிடைக்கும். மேலும், கோடைக்கால சிறப்பு உரிமைத்தொகையாக ரூ.2,000 தனியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தமாக வருடத்திற்கு ரூ.26,000 வரை பெண்களுக்கு நிதியுதவி கிடைக்கும் வகையில் திட்டம் விரிவாக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 1.31 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர். இத்திட்டம் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும், குடும்பச் செலவுகளுக்கும், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்கும் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வீடியோ வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார்....