இரும்பு கேட்டால் மூடப்பட்ட கிணற்றில் திருப்பத்தூர் பள்ளி மாணவன் சடலம்.. எப்படி? அதிர்ச்சி தகவல்கள்..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி, 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் முகிலன் (வயது 16) கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வகுப்புக்கு வரவில்லை. வீட்டிற்கும் திரும்பாததால், அவரது பெற்றோர் அச்சமடைந்து திருப்பத்தூர் நகர போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து, மாணவனின் பெற்றோர் மற்றும் போலீஸார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், அதே பள்ளியின் முகப்பு மூடப்பட்டிருந்த கிணற்றில் ஒரு மாணவனின் உடல் இறந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பத்தூர் நகர போலீஸார், கிணற்றிலிருந்து உடலை மீட்டு ஆராய்ந்தபோது, அது காணாமல் போன மாணவன் முகிலன் என்பது உறுதியானது. இதையடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.மாணவனின் மர்மமான இறப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேல்பகுதி மூடப்பட்டிருந்த கிணற்றுக்குள் முகிலன் எப்படி சென்றான்? அங்கு சடலம் கிடந்த சூழ்நிலைகள் என்ன? இறப்புக்கான காரணம் என்ன? என்ற பல அடிப்படை விளக்கங்கள் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையில், மாணவனின் குடும்பத்தினர் அவர் மீது ஏதேனும் அச்சுற...