Posts

Showing posts with the label motherhood aspiration

25 வயதில் நடந்த சம்பவம், குழந்தை பிறக்காத காரணம்? இதனால் தான் திருமணம் பண்ணிக்கல! - நடிகை மும்தாஜ்

Image
சென்னை : தமிழ் திரையுலகில் தனது கவர்ச்சியான நடிப்பாலும், பாடல்களாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை மும்தாஜ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். 19 வருடங்களாக சினிமாவில் பயணித்து வரும் இவர், தற்போது 38 வயதில் இருந்தாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் அவருக்கு திருமணம் மற்றும் குழந்தை பெறும் ஆசையை தூண்டியுள்ளதாக கூறியுள்ளார். மும்தாஜின் திரைப்பயணம் 1999ஆம் ஆண்டு இயக்குநர் டி.ராஜேந்தரின் 'மோனிஷா என் மோனாலிசா' திரைப்படத்துடன் தொடங்கியது. இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், பின்னர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக, 'சாக்லேட்' படத்தில் இடம்பெற்ற 'மலை மலை' பாடலும், 'குஷி' படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆடிய 'கட்டிப்பிடி கட்டிப்பிடிடா' பாடலும் அவரது டிரேட்மார்க் ஹிட் பாடல்களாக மாறின. இந்தப் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்ற மும்தாஜ், தனது கவர்ச்சியான தோற்றம் மற்றும் நடனத்தால்...