'சீக்கிரமா பண்ணு.. கைதியுடன் தனிமையில்’ லீக் ஆன வீடியோ.. இந்த பெண் யாருன்னு தெரியுதா..? அதிர்ச்சியில் முக்கிய புள்ளிகள்!
ஆந்திரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஆயுள் தண்டனை கைதியுடன் ஒரு பெண் நெருக்கமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பெண், அருணா. ஒரு சாதாரண பொட்டிக்கடை உரிமையாளராகவும், சமூக சேவகியாகவும் வெளியுலகிற்கு தோற்றமளித்தாலும், குற்ற உலகில் ‘டான்’ போல செயல்பட்டு வந்தவர் இவர். இவரது கதை, ஆந்திர அரசியல் முக்கிய புள்ளிகளை மற்றும் காவல்துறையை உலுக்கிய ஒரு புயலாக மாறியது எப்படி? விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அருணாவின் பின்னணி மற்றும் குற்றப் பயணம் அருணாவுக்கு திருமணமாகி, கணவர் மற்றும் பிள்ளைகள் இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த பிறகு, அவருக்கு ரவுடி ஸ்ரீகாந்துடன் பழக்கம் ஏற்பட்டது. ஸ்ரீகாந்தின் குரல், அருணாவின் மறைந்த கணவரின் குரலை ஒத்திருந்ததால், அவரை காதலிக்கத் தொடங்கினார். 2010ஆம் ஆண்டு மதுக்கடை மேலாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஸ்ரீகாந்த், நெல்லூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2014இல் சிறையில் இருந்து தப்பிய அவர், 2018இல் மீண்டும் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீகாந்த் சிறையில் இருந்தபோது, அருணா அவ...