செம்ம சீனு இருக்குது.. சற்று முன் விஜய் எடுத்த முக்கிய முடிவு.. அதிரப்போகும் அரசியல் களம்..
சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தால் தனது தேர்தல் பரப்புரையை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கரூர் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்று (செப்டம்பர் 30, 2025) வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜய், கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று (அக்டோபர் 1, 2025) அவர் தனது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, விஜய் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, அவருக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனக் கோரி, தவெக சார்பில் ஏற்கெனவே காவல்துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்தவுடன், விஜய் கரூர் சென்று அங்குள்ள பா...