Posts

Showing posts with the label prior dispute

சுடுகாட்டில் வேறொருவர் என நினைத்து அப்பா உடலை எரித்த மகன்.. "அப்பான்னு எனக்கு தெரியாது சார்.." எரித்த இடத்தில் 2 மண்டை ஓடுகள்.. கிராமத்தை அலறவிட்ட பகீர் சம்பவம்

Image
தந்தையின் உடலை அடையாளம் தெரியாமல் எரித்த மகன் – குமிழியம் பகுதியில் பெரும் அதிர்ச்சி! முன்பகை காரணமாக கொலை என குடும்பத்தினர் சந்தேகம் அரியலூர் மாவட்டம், செந்துரை அருகே உள்ள குமிழியம் கிராமத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை சுடுகாட்டில் எரியூட்டும் பணியில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு (எரியூட்டுபவர்), அவரது மகன் சக்திவேல் மற்றும் அறிவழகன் மூர்த்தி ஆகிய மூவரும் இரவு நேரத்தில் இருந்தனர். நல்லிரவைத் தாண்டிய நேரத்தில் தங்கராசு மட்டும் சடலத்தை எரியூட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. காலையில் சுடுகாட்டுக்கு வந்த உறவினர்கள், உடல் பாதியாக எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சக்திவேலை அழைத்து சத்தம் போட்டனர். அதன் பிறகு சக்திவேல் உள்ளிட்டோர் வந்து, பாதி எரிந்த உடலின் மீது மண்ணெண்ணை ஊற்றி முழுவதுமாக எரித்தனர். எரியூட்டும் பணி முடிந்த பின்னர் தங்கராசுவைத் தேடியபோது அவர் காணாமல் போனதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். சுடுகாட்டுக்கு வந்த போலீசார், எரிக்கப்பட்ட இடத்தில் கூடுதல...