Posts

Showing posts with the label Kaithi Tamil Movie

"கைதி" திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..!

Image
மாநகரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஜனரஞ்சக சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவார்ந்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடித்த கைதி திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி இல்லை. பாடல்கள் இல்லை. கதையையும், கதையின் நாயகனை மட்டுமே நம்பி வெளியானது இந்த படம். இந்த திரைபடத்தின் இசை சாம் CS, ஒளிப்பதிவு சத்யன் சூரியன், படத்தொகுப்பு பிலோமின் ராஜ் ஆவர்கள். கைதி திரைப்படத்தை டிரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு தயாரித்தது. நடிகர் விஜய்யின் "பிகில்" திரைப்படத்தோடு போட்டி போட்டு வெளியான இத்திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. இந்நிலையில், இந்த படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் ஒரு நிமிஷம் ஷாக் ஆகித்தான் போனார்கள். ஆம், வில்லன் நடிகர் மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் ...

அதுக்குள்ள என்ன அவசரம் - "கைதி" படத்தால் காண்டான திரையரங்கு உரிமையாளர்கள்..!

Image
கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிகில் படத்திற்கு போட்டியாக வெளியானது கைதி. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் பறந்தன.  இதனால், கைதி திரைப்படம் நல்ல வசூலை பெற்று 100 கோடி கிளப்-ல் சேர்ந்தது. இந்த படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது. மேலும், நடிகர் கார்த்திக்கும் நீண்ட நாள் கழித்து ஒரு ஹிட் படமாக அமைந்தது கைதி. இந்த படம் இன்னமும் திரையரங்குகளில் நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்  ஆன்லைனின் HD தரத்தில் அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்துள்ளது படத்தின் ஆன்லைன் உரிமையை வாங்கிய நிறுவனம். இதனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என கடுப்பாகி உள்ளார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

கொசு மருந்து மெஷினுக்கு நன்றி - ரசிகர்களை அலறவிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

Image
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான "கைதி" திரைப்படம் கடந்த தீபாவளி அன்று நடிகர் விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக களமிறங்கி விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. மேலும், 100 கோடி க்ளப்பிலும் சேர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கும் ஒரு மைல் கல்லாக அமைந்தது. தற்போது, தளபதி64 படத்தை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் ,"கைதி" படத்தின் வெற்றி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்து ரசிகர்களை அலறவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, " கைதி வெற்றிகரமாக 25வது நாள்😊இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும் , ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி . 🙏🏻🙏🏻🙏🏻 அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி😂" என்று கூறியுள்ளார்.  கைதி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்ற அந்த Machine Gun -னை தான் இயக்குனர் லோகேஷ் கொசு மருந்து அடிச்ச மிஷின் என்று கூறியுள்ளார். கைதி வெற்றிகரமாக 25வது நாள்😊இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும் , ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி . 🙏🏻🙏🏻🙏🏻 அப்படியே அந்த கொ...

ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் பிகில் படத்தை முந்தி கைதி புதிய சாதனை - அதிரடி ரிப்போர்ட்

Image
கடந்த 25-ம் தேதி பிகில் மற்றும் கைதி என இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் ரிலீஸ் ஆகின. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் கலைவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், கைதி சிறப்பான விமர்சனங்களை பெற்று ரசிகர்களை கவர்ந்தது.  இந்நிலையில், பிரபல ஆன்லைன் சினிமா டிக்கட் புக்கிங் நிறுவனமான புக் மை ஷோ-வில் பிகில் படத்தை முந்தியுள்ளது கைதி. தமிழில் வெளியான பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களும் தெலுங்கு மொழியில் டப் செய்யபட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாவட்டங்களில் வெளியானது. ஏற்கனவே, தெலுங்கில் நல்ல ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் கார்த்தி தன்னுடைய கைதி படத்தின் மூலம் பிகில் படத்தை காட்டிலும் அதிக வசூல் செய்துள்ளார்.மேலும்,ஒட்டுமொத்தமாக பிகில் படத்தின் ஆன்லைன் புக்கிங்கை விட அதிகமான டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்று புதிய சாதனையையும் படைத்துள்ளது கைதி.

ஐந்தாம் நாளில் பிகில் வசூலை முந்திய சாதனை - மாஸ் காட்டும் "கைதி"

Image
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிகரமான ஓடி வருகின்றது. அதே நாளில் வெளியான கைதி திரைப்படம் நல்ல விமர்சங்களை பெற்று நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து கொண்டே வந்தது.  இந்நிலையில்,நேற்று அமெரிக்காவில் பிகில் படத்தின் வசூலை விட அதிகமாக வசூல் செய்துள்ளது கைதி. இத்தனைக்கும், பிகில் படத்தை விட குறைவான திரைரங்குகளில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் கைதி இந்த சாதனையை செய்து மாஸ் கட்டியுள்ளது. தற்போது வந்துள்ள தகவலின் படி, அமெரிக்காவில் நேற்று மட்டும் பிகில் திரைப்படம் மொத்தமுள்ள 90 இடங்களில் திரையிடப்பட்ட 20 ஆயிரம் டாலர்களை வசூலிக்க, வெறும் 49 இடங்களில் மட்டும் திரையிடப்பட்ட கைதி திரைப்படம் 21 ஆயிரம் டாலர்களை வசூல் செய்துள்ளது. விஜய் படத்தின் வசூலை தனது ஐந்தாவது நாளில் அமெரிக்காவில் முடியடிதுள்ள கைதி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள ஆதரவு இதன் மூலம் தெரியவந்துள்ளது.

முதல் நாளை விட இரண்டாம் நாள் கைதி வசூல் எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது தெரியுமா..?

Image
நடிகர் கார்த்தி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் "கைதி". இந்த படத்தை தயாரிப்பளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். கடந்த 25-ம் தேதி பிகில் படத்திற்கு போட்டியாக வந்த இந்த படம் பிகில் படத்தை காட்டிலும் நல்ல விமர்சனங்களை பெற்றது.  அந்த வகையில், விமர்சன ரீதியாக இந்த தீபாவளி வின்னர் "கைதி" தான். இந்நிலையில், இந்த படம் முதல் நாள் வசூலித்ததை விட இரண்டாம் நாள் அதிக வசூல் செய்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆம்,ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடிகர் கார்த்திக்கு சொல்லிக்கொள்ளும் படி ரசிகர்கள் வட்டம் இருக்கின்றது. கடந்த சில படங்கள் தோல்வியை தழுவிய காரணத்தினால் குறைந்திருந்த அவரது தெலுங்கு மார்கெட் நல்ல விமர்சனங்களை பெற்ற கைதி படத்தினால் மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் முதல் நாள் வசூலை விட மூன்று மடங்கு அதிகமாக இரண்டாம் நாள் வசூல் செய்து ரசிகர்களின் மனதை கைது செய்துள்ளார் இந்த "கைதி".

போடு தகிட தகிட..! - கைதி 2 குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்ன கூறியுள்ளார் பாருங்க..!

Image
கைதி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிட ம்ஆரவாரமான வரவேற்பை பெற்றுள்ளது. படம் தொடங்கிய நிமிடத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை சலிப்பு தட்டாத படத்தின் திரைக்கதையும் கதையின் மீது ரசிகர்களுக்கு ஏற்பட்ட பிடிப்பு விட்டுப்போகமல் கதையை நகர்த்தி சென்ற விதத்திலும் கைதி வெற்றி பெற்றுவிட்டான்.  இந்நிலையில், படத்தில் வரும் முக்கிய வில்லனான அடைக்களம் சிறையில் இருப்பது போன்றே படம் முடிக்கப்பட்டது.  மேலும், க்ளைமாக்ஸ் காட்சியில் யாருன்னே அவன், சம்பந்தமே இல்லாம உள்ள புகுந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டான் என்று ஒரு அல்லக்கை கேட்கும் போது " சம்பந்தம் இருக்கு..! அவன் பேரு டெல்லி.." என்று சொல்வதோடு முடிகிறது படம். இதனை வைத்து பார்க்கும் போது கைதி இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்கள் யூகித்து விட்டனர்.  மேலும், கைதி 2 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஷயத்தை காய போடாமல் உடனடியாக பதிலளித்துள்ளார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளதன் படி " எனக்கு வாய்ப்பு கொடுத்த கார்த்திக்கும், படத்தின் த...

தமிழ் சினிமா ஃபார்முலா எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் - நான் எடுக்குறேன் படம் - மிரட்டிய லோகேஷ் கனகராஜ்

Image
கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படம் நேற்று (25-ம் தேதி) ரிலீஸ் ஆனது . லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பிகிலுக்கு போட்டியாக களம் இறங்கிய இந்தப் படம் வசூலில் ஈடு கொடுக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிகில் திரைப்படத்தில் ஆமை வேக திரைக்கதயாலும், விஜய்க்கு கொடுக்கபட்ட ஓவர் பில்டப் காட்சிகளாலும், விஜய்-நயன்தாரா காதல் காட்சிகள் போன்ற போரான விஷயங்களால் கலைவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது.  மறுப்பக்கம், விஜய்யின் அடுத்த படமான தளபதி64 படத்தை இயக்கவுள்ள  இயக்குனர் லோகேஷ்  கனகராஜ்  இயக்கத்தில் வெளியாகியுள்ள கைதி. இவர் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான "மாநகரம்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் படத்தோட டைரக்டர் யாருப்பா.? என்று தேடிப்பேசும் படமாக அமைந்தது.  இந்நிலையில்,தன்னுடைய இரண்டாவது படமாக "கைதி" படத்தை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், நாலு பாட்டு, நாலு ஃபைட்டு, ஒரு ஐட்டம் பாடல், இவையனைத்தும் இணைக்க ஒர...

ஹீரோயின் இல்லை, பாடல் இல்லை, காமெடி இல்லை - "கைதி" எப்படி இருக்கு.? - படம் பார்த்தவர்கள் என்ன சொல்றாங்க..! - வாங்க பாக்கலாம்

Image
மாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய ‘கைதி’ இன்று ரிலீசாகியுள்ளது.  இதனை தொடர்ந்து, தற்போது தமிழகமே எதிர்பார்க்கும் விஜய் 64 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம்குறித்துலோகேஷ் கனகராஜ் கூறுகையில், இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே கதாநாயகி தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.படத்தில் கார்த்தியை மையப்படுத்தி தான் கதை. அவரைச் சுற்றி தான் எல்லாமும் நடக்கும். இந்தப்படத்துக்கான லுக் ரெடியாகும்போதே அவரது லுக் பருத்தி வீரன் போல இருப்பதாக சொன்னார்கள்.  ஆனால் அது எங்கேயும் படத்தில் வந்துவிடக்கூடாது என உழைத்திருக்கிறோம். அவர் ஒத்துக்கொண்டதால் தான் இந்தப்படமே உருவானது. என்று கூறியிருந்தார். கதைப்படி, ஒட்டுமொத சிறையையே தன்னுடைய உள்ளங்கையில் வைத்திருக்கும் கதாநாயகன் கார்த்தி நன்நடத்தை காரணமாக ஒருநாள் ரிலீஸ் செய்யபடுகிறார். ரிலீஸ் ஆகி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த நாயகனை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் மீண்டும் கைது செய்து ஜீப்பில் அழைத...

"பிகில்"ன்னு நெனச்சி "கைதி" டிக்கெட் எடுத்துட்டேன் என்று கூறிய விஜய் ரசிகரை கலாய்த்த "கைதி" தயாரிப்பாளர்

Image
‘பிகில்’ திரைப்படம் வெளியாகும் தேதி நெருங்கி வருவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே நேரம், பட வெளியீட்டில் இருக்கும் சில சிக்கல்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.  விஜய்யின் முந்தைய திரைப்படங்கள் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததால், அவரது திரைப்படங்களுக்கான பட்ஜெட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. அந்தவகையில், அவர் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வரும் 'பிகில்' திரைப்படம் விஜய்யின் சம்பளத்தோடு சேர்த்து சுமார் 130 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.  இதனால், அதனை ஈடுசெய்ய வேண்டிய வியாபாரமும் அவசியமாகி உள்ளது. அதே நேரம், ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு, அரசியல் ரீதியாக படத்திற்கு சிக்கலை ஏற்படுத்துமோ? என்கிற குழப்பத்தையும் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.  இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு 25-ம் தேதி வெள்ளிக்கிழமையே ‘பிகில்’ வெளியாகும் என அறிவித்த தயாரிப்ப...

"பிகில்" அடிச்சா அடிக்கட்டும் - நாங்களும் வரோம்..! - தீபாவளி ரேஸில் "தளபதி64" இயக்குனரின் படம்..! - அனல் பறக்கும் போட்டி..!

Image
மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம்tதீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் "கைதி" திரைப்படத்தையும் அதே நாளில் இறக்குவதில் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் விடாப்பீடியாக உள்ளது. இதில், ப்யூட்டி என்னவென்றால் இந்த "கைதி" படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாங்க மோதி பாத்துருவோம் - பிகிலுடன் மோத தயாரான பிரபல நடிகரின் படம்.! - கலை கட்டும் தீபாவளி ரேஸ்..!

Image
மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் கைதி படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார்.  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்நிலையில், கைதி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. ஏற்கனவே, தீபாவளிக்கு விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் பிகில் படம் ரிலீசாக உள்ளது.  தற்போது இப்படத்திற்கு போட்டியாக கைதி படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது என படக்குழு வட்டா...