அந்த உறுப்பில் காயம்.. நடிகை பிரதியுஷா மரணம்.. இன்று இறுதி தீர்ப்பு.. கண்ணீருடன் தாய்.. வழக்கு கடந்த வந்த பாதை..
சென்னை, நவம்பர் 22: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நடிகை பிரத்யுஷா இறப்பு வழக்கின் இறுதி விசாரணை கடந்த நவம்பர் 19-ஆம் தேதி உச்ச நீதிமன்ற அமர்வுக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ராஜேஷ் பிந்தல் மற்றும் மன்மோகன் ஆகியோர் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். இந்த வழக்கு 23 ஆண்டுகளாக தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில், பிரத்யுஷாவின் ரசிகர்கள் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர். யார் இந்த பிரத்யுஷா? தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பிரத்யுஷா. சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், தனது அண்ணனின் வளர்ப்பில் வளர்ந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று 'மிஸ் லவ்லி ஸ்மைல்' என்ற பட்டத்தை வென்றார். அவரது சிரிப்பு அனைவரையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின.1988-ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர்ஸ்டார் மோகன் பாபு நடித்த படத்தில் அறிமுகமானார் பிரத்யுஷா. தமிழில் தம்பி ராமையா இயக்கிய 'மனு நீதி' படத...