ஆபாச படங்களுக்கு அடிமையான இரு குழந்தைகளின் தாய்.. பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் கொடூரம்..
கன்னியாகுமரி மாவட்டத்தில், வீட்டில் குழந்தை விஷம் சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவம் ஒன்று போலீசாருக்கு ஆரம்பத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், விசாரணை தீவிரமடைந்தபோது வெளியான உண்மைகள் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தின. ஒரு குழந்தையின் உயிரை பறித்த சம்பவத்தின் பின்னால், குடும்பத்தினருக்கும் தெரியாமல் நீண்ட நாட்களாக நடந்துவந்த ஒரு ரகசிய உறவும், அதிலிருந்து உருவான விபரீத முடிவும் இருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. திடீரென மயங்கிய ஒன்றரை வயது குழந்தை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் வசித்து வந்தவர் 22 வயதான கார்த்திகா. இவரது கணவர் ஜெகதீஷ். கட்டிடத் தொழிலில் வேலை செய்து வந்த அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஜெகதீஷ் வழக்கம்போல வேலைக்குச் சென்றிருந்தார். வீட்டில் கார்த்திகாவும் அவரது இரண்டு குழந்தைகளும் இருந்தனர். அப்போது ஒன்றரை வயதான ஆண் குழந்தை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கியதாக கார்த்திகா தனது கணவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அ...