Posts

Showing posts with the label housing assistance

கண்ணீருடன் விஜய்.. மனுஷன பாக்க முடியல.. என்ன இப்படி ஆகிட்டாரு.. வைரலாகும் வீடியோ..

Image
சென்னை, அக்டோபர் 27: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் தொடர்ந்து முயற்சிகளைச் செய்து வருகிறார். மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள 33 குடும்பங்களை தனித்தனியாகச் சந்தித்து, கண்ணீருடன் ஆறுதல் கூறி வரும் அவர், கட்சி நிர்வாகிகள் யாருடனும் இல்லாமல் தனிமையில் இந்தச் சந்திப்புகளை நடத்துகிறார். செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தனது அரசியல் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனுக்காகவே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு 5 பேருந்துகளில் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட இந்தக் குடும்பங்கள், மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இன்று அதிகாலை முதல் தொடங்கிய சந்திப்புகளில், விஜய் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களின் துயரத்தைப் பகிர்ந்துகொண்டு ஆறுதல் கூறி வருகிறார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகளைப...