இரண்டு ஆண்டுகள் உடலுறவை தவிர்த்த கணவனின் உயிரணுவை எடுத்து மனைவி செய்த வினோதம்! விசாரணையில் பகீர்!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமணத்துக்குப் பின் உடல்ரீதியான உறவை முழுமையாக்க மறுத்ததாகவும், கருவுறுதல் தொடர்பான பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், வரதட்சணைக்காக தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் முதல் நாளிலிருந்தே பிரச்சினை இருவரும் 2021 நவம்பர் 19 அன்று லக்னோவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான முதல் நாளிலிருந்தே கணவர் உடல்ரீதியான நெருக்கத்தைத் தவிர்த்து வந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி, தனது கணவரிடம் உடல் சார்ந்த ஏதேனும் பிரச்சினை இருந்தால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதற்கு கணவரும் சிகிச்சை எடுத்துக் கொள்வதாக உறுதியளித்தார். “சிகிச்சை முடிந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும்” என்று மனைவியிடம் மீண்டும் மீண்டும் கூறி வந்த கணவர், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்தும் திருமண உறவில் எந்தவித ஈடுபாடும் காட்டவில்லை என்பது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்க...