உடல் பாகங்களுக்கு இன்சுரன்ஸ் போட்டு வைத்துள்ள பிரபல நடிகர் நடிகைகள் - இதை கூடவா இன்சூர் பண்ணுவாங்க..!?
உலகஅளவில் உள்ள பிரபலங்கள் தங்களுடைய உடல் பாகங்களை இன்சூர் செய்வது நடைமுறையில் இருந்து வருகின்றது. இதற்காக,வருடா வருடம் பெரிய தொகையை செலவு செய்கிறார்கள்.இந்த பழக்கம் இந்திய நடிகர்களையும் விட்டு வைக்க வில்லை. ஆம், முன்னணியில் இருக்கும் பல நடிகர்கள்மற்றும் நடிகைகள் தங்களுடைய உடல் பாகங்களுக்கு இன்சுரன்ஸ் போட்டு வைத்துள்ளார்கள். அதற்கு ஏதேனும் குறை ஏற்படும் போது அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் அதற்கு ஆகும் செலவை அவர்களுக்கு வழங்கும் என்பது கூடுதல் தகவல். அப்படி என் விஷயங்களை நடிகர்கள் இன்சுரன்ஸ் (Insurance) செய்து வைத்துள்ளார்கள் வாங்க பாப்போம், 1. அமிதாப் பச்சன் இவர் தனது குரலை இன்சூர் செய்து வைத்துள்ளார். இவர் இறுதி காலம் வரை இவரது குரலுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டாலோ, பாதிப்பு ஏற்பட்டாலோ இன்சுரன்ஸ் நிறுவனம் மொத்த செலவையும் ஏற்றுக்கொள்ளும். இதற்காக, வருடா வருடம் லட்சகணக்கில் இன்சுரன்ஸ் தொகை கட்டுகிறார். 2.ரஜினிகாந்த் அமிதாப் பச்சானின் நெருங்கிய நண்பரான ரஜினி அவரை போலவே தன்னுடைய குரலுக்கும் இன்சுரன்ஸ் போட்டு வைத்துள்ளார். இதற்காக, பெருமளவ...