Posts

Showing posts with the label attempted rape

‘மேடம்... இது ஆக்‌ஷன் மேடம்” கோயில் வாசலில் பிச்சை எடுத்த போலீஸ்காரர்.. இப்படி ஒரு குற்றம் செய்தவரா..?

Image
கரூர், நவம்பர் 25, 2025 : கரூர் மாவட்டத்தில் போலீஸ் காவலராக பணியாற்றியவர், பாலியல் அத்துமீறல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு, கோவில் வாசலில் பிச்சை எடுத்து கதறி அழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தச் சம்பவத்தின் பின்னணியில், ஒரு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் மற்றும் போலீஸ் துறையின் நடவடிக்கைகள் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் மாவட்டம், சனப்பிரட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சின்னாண்டாம் கோவிலைச் சேர்ந்த 25 வயது இளைஞருடன் நட்பாகப் பழகி வந்தார். கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு, இருவரும் சனப்பிரட்டி அருகிலுள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கரூர் பசுபதிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிய வெங்கமேட்டைச் சேர்ந்த 35 வயது பிரபாகரன், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். பிரபாகரன், தனது நண்பரும் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவருமான கௌதமனை பைக்கில் பின்னால் அமர வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் தொழில்பேட்டை பகுதியில் செல்லும் போது, இளம்பெண்ணும் இளைஞரும் அ...