“பின்னாடி பண்ணிக்கோங்க, முன்னாடி வேண்டாம்..” புதருக்குள் பிணமான மனைவி! வெளியான பகீர் ஆடியோ!
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை அருகே உள்ள ஒரு விவசாய கிராமத்தில் நடந்த சம்பவம் இன்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 36 வயதான சுஜாதா என்ற பெண், தன் கணவர் வெங்கடேஷ் வைத்திருந்த விவசாய நிலத்தின் புதர் பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அன்றைய காலை நேரத்தில் அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள் இதைப் பார்த்து அதிர்ந்து போய், உடனே ஊர் முழுவதும் தகவல் பரப்பினர். காவல்துறை விரைந்து வந்து இடத்தைச் சுற்றி வளைத்து விசாரணையைத் தொடங்கியது. ஆரம்பத்தில் அனைவரின் கவனமும் சுஜாதாவின் கணவர் வெங்கடேஷ் மீதே திரும்பியது. “மனைவி மரணத்துக்கு கணவன் தான் காரணம்” என்ற சந்தேகம் கிராமம் முழுவதும் பரவியது. சுஜாதாவின் தாய் தந்தையர் அதாவது வெங்கடேஷ் மாமனார் மாமியார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விசாரணை தொடங்கியது. ஆனால் வெங்கடேஷ் உறுதியாக மறுத்தார். “நான் எதுவும் செய்யவில்லை. இந்த மரணத்துக்கு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. சம்பவம் நடந்த அன்று நான் இந்த ஊரிலேயே இல்லை” என்று கூறினார். அவர் சொன்னபடியே அன்றைய தினம் அவர் வேறு ஊரில் இருந்ததற்கான ஆதாரங்களையும் காட்டினார். கிட்டத்தட்ட பத்து நாட...