பூமிக்கு அருகில் வரவிருக்கும் கடவுள் - நாசா அறிவிப்பு..!
பூமியை அருகே வருகின்றார் எகிப்த் கடவுள் அபோபிஸ் என்று நாசா கண்டறிந்துள்ளது. இந்த சம்பவம் நடக்க இன்னும் நாம் 9 ஆண்டுகள் காக்க வேண்டும். அதாவது 2029ம் ஆண்டில் தான் நாம் காண முடியும். இதுகுறித்து நாம் விளக்கமாக பார்க்கலாம். எகிப்தில் ஏராளமான மர்மங்கள் புதைந்துள்ளன. எகிப்தியர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் இவைகள் மற்ற நாடுகளை காட்டிலும் வேறுபட்டது. அவர்கள் சூரியன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களையும் வழங்கியுள்ளனர். மற்ற நாடுகளை காட்டிலும் அவர்களின் தனித்துவமான பிரதிபலிப்பும் இருகின்றது. அவர்கள் வணங்கும் கடவுள்களில் ஒருவராக எகிப்தின் கடவுளான அபோபிஸ் எனப்படும் கடவுள் இருக்கின்றார். (Apophis) எகிப்தின் கடவுளான அபோபிஸ் ஒரு சர்பத்தை போல தோற்றமளிக்கின்றார். இதை அந்நாட்டு மக்கள் வினோத சடங்கு முறைகளில் வழிபட்டு வந்தனர். எகிப்த் கடவுளான அபோபிஸ் பூமி அருகே வருகின்றார் என்று நாசா கூறியிருக்கின்றது. அதுவும் 2029ம் ஆண்டில் வருவதாக நாசா உறுதி கூறியுள்ளது. மேலும், பூமிக்கு வருவது உண்மையான கடவுள் அல்ல. இது விண்கல் ஆகும். எகிப்தின் கடவுளான அபோபிஸ் என பெயர் சூட்டப்ப...