“இங்க்லீஷ் படம் மாதிரி பண்ணலாம் வாடா..” - கை கால்களை கட்டிப் போட்டு இல்லத்தரசி அரங்கேற்றிய கொடூரம்..
திருவள்ளூர்-புட்லூர் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2025-ல் ஒரு ஆணின் உடல் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் ரயில்வே காவல்துறையின் விசாரணையில், அந்த உடல் டாஸ்மாக் குடோனில் பணிபுரிந்த அரவிந்த் மேத்யூ (25) என்பவருடையது என்பது தெரியவந்தது. முதலில் இது தற்கொலையா அல்லது ரயில் மோதிய விபத்தா என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அரவிந்தின் தந்தை மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் அளித்ததையடுத்து, விசாரணை தீவிரமடைந்தது. பிரேத பரிசோதனையில் அரவிந்த் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. காவல்துறை, அவரது செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்து, அயப்பாக்கத்தைச் சேர்ந்த உஷா (30), ராணிப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரைக் கைது செய்தது. விசாரணையில், உஷாவின் கணவர் பாண்டியன், பிரபல ரவுடியாக இருந்தவர், சில ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஒன்பது வயது மகனுடன் வாழ்ந்து வந்த உஷா, 17 வயது சிறுவனுடன் உறவில் இருந்தார். உஷா, திருவள்ளூர் பகுதியில் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அவர் அடிக்கடி தோழியின் வீட்டுக்கு செல்லும்போத...