Posts

Showing posts with the label hoax email

எல்லாம் ஒரு அளவுக்கு தான் ப்ரோ..! முன்னாள் மனைவிக்காக மெட்ரோ ரயில் நிலையத்தை அலறவிட்ட நபர்..!

Image
பெங்களூரு, நவம்பர் 18, 2025 : பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு கடந்த நவம்பர் 13-ஆம் தேதி இரவு 11:25 மணிக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல் ஒன்று வந்தது. rajivsett**p@gmail.com என்ற ஜிமெயில் கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில், "என் முன்னாள் மனைவியான பத்மினியை வேலை நேரம் முடிந்த பிறகு மனரீதியாக துன்புறுத்தினால், உங்கள் மெட்ரோ நிலையங்களில் ஒன்று வெடித்துச் சிதறும். கன்னடர்களுக்கு எதிராக நானும் ஒரு தீவிரவாதி போன்ற தேசபக்தன்" என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.இந்த மின்னஞ்சலை BMRCL இன் உதவலர் பொறியாளர் (சைபர் செக்யூரிட்டி) ரத்தீஷ் தாமஸ் கண்டறிந்து, நவம்பர் 14 அன்று வில்சன் கார்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதலில் non-cognisable புகாராக பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற அனுமதி பெற்று நவம்பர் 15 அன்று FIR பதிவு செய்யப்பட்டது. புதிய பாரதிய நியாய சட்டத்தின் (BNS) பிரிவு 351(2), 351(3) ஆகியவற்றின் கீழ் குற்றவியல் மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், மின்னஞ்சலை அனுப்பியது கடுகொடி பகுதியைச் சே...