Posts

Showing posts with the label Kavita Dewangan

“சடலமாக மீட்கப்பட்ட மாணவன்..” ஒரு வீடியோ! வசமாக சிக்கிய இளம் ஆசிரியை! இறுதியில் வெளிவந்த 7 மாத ரகசியம்!

Image
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்ற 25 வயது மாணவன் ரோஹித் குமார் சாஹு, ஏழு மாதங்களுக்கு முன் காணாமல் போனார். சில நாட்களுக்குப் பிறகு மாவட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் செய்தி கல்லூரி வளாகத்தையும் சுற்றுவட்டாரத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆரம்ப விசாரணையில் சில மாணவர்களிடமிருந்து ஒரு தகவல் கிடைத்தது. ரோஹித் அதே கல்லூரியில் ஆசிரியையாகப் பணிபுரியும் இளம் ஆசிரியை கவிதா தேவாங்கனுடன் நெருக்கமாகப் பழகியதாகவும், இருவருக்கும் இடையே தகாத தொடர்பு இருந்ததாகவும் வதந்தி பரவியது. சிலர் மாணவனின் உயிரிழப்பிற்கு அந்தத் தொடர்பு காரணமாக இருக்கலாம் என்றும் பேசினர். கவிதாவைக் காவல்துறை விசாரித்தது. அவர் உறுதியாக மறுத்தார். “அந்தக் காட்டுப் பகுதியின் பக்கம் நான் சென்றதே இல்லை. ரோஹித்துடன் நல்ல முறையில் பழகியிருக்கிறேன். சக மாணவன் என்ற அடிப்படையில் பல மாணவர்களுடனும் நெருக்கமாகப் பேசியிருக்கிறேன். ஆனால் ஆசிரியை–மாணவன் என்ற உறவைத் தாண்டியதில்லை. சில மாணவர்கள் என்னிடம் காதலை வெளிப்படுத்தினர். நான் மறுத்துவிட்டே...