புதையல் எடுக்க சென்றவருக்கு புதரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! என்ன நடந்தது?
கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே கெலமங்கலம் பகுதியில் புதையல் எடுக்கும் நம்பிக்கையில் நடைபெற்ற சடங்கில் ஒரு விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை நரபலி சடங்குடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (52) என்பவர் விவசாயத் தொழில் செய்து வந்தார். அவரது வெற்றிலைத் தோட்டத்தில் புதையல் இருப்பதாக நம்பிய அவர், தர்மபுரியைச் சேர்ந்த மணி (65) என்பவருடன் இணைந்து புதையல் எடுக்க திட்டமிட்டார். மணி ஒரு பாதுகாவலராக பணியாற்றி வந்தவர். சாமியார் ஒருவர் மூலம் புதையல் கிடைக்க நரபலி கொடுக்க வேண்டும் என லட்சுமணனுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மணியிடம் சிகிச்சைக்கு வரும் ஒரு பெண்ணை தோட்டத்துக்கு அழைத்து அவரை பலியிட இருவரும் திட்டமிட்டனர். செப்டம்பர் 28-ம் தேதி தோட்டத்தில் சுமார் 1.5 அடி ஆழ குழி தோண்டி, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, மஞ்சள், குங்குமம், கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வைத்தனர். ஒரு கோழியையும் அறுத்து சடங்கு நடத்தினர். ஆனால், திட்டமிட்ட பெண் வராததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. லட்சுமணன் மணியை தாக்க ம...