மகள் வயது இளம் நடிகையை 4-வதாக திருமணம் செய்த பிரபல நடிகர் - 4-வது நாளே அரங்கேறிய கூத்து..!
ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் நிக்கோலஸ் கேஜ். 51 வயதான மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அண்மையில் எரிக்கா கொய்கே என்ற பெண்ணை கடந்த மாதம் 4 வதாக திருமணம் செய்தார். அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் இவர்களது நடைபெற்ற திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த 4 வது நாள் அவர் புது மனைவியுடன் விடுதிக்கு வெளியே சண்டை போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது அவர் தான் திருமணத்தின் அதிகமான குடிபோதையில் இருந்ததாகவும், தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என விவாகரத்து கோரியுள்ளார். இந்நிலையில் எரிக்கா அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, தனக்கு ஒவ்வொரு மாதமும் கணவர் பண உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில் நீதிமன்றம் அவர்களுக்கு தற்போது விவாகரத்து வழங்கியுள்ளது.