என்னென்ன சொல்றாங்க பாருங்க.. "மமிதா" பைஜூ பெயர் இப்படித்தான் வந்துச்சு.. அவரே கூறிய விசித்திர காரணம்..
சென்னை, அக்டோபர் 25 : மலையாள சினிமாவின் உயரம் ஏறும் நடிகை மமிதா பைஜுவின் பெயர் பின்னணியைப் பற்றிய சுவாரசியமான கதை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவரது பெற்றோர்கள் 'நமிதா பைஜு' என்று பெயரிடுகையில், பிறப்புச் சான்றிதழில் தவறாக 'மமிதா பைஜு' என்று எழுதப்பட்டதால் அது தான் அவரது அதிகாரப்பெயராக மாறியது. இந்தக் கதையை அவர் பகிர்ந்ததும், ரசிகர்கள் "என்னென்ன சொல்றாங்க பாருங்க.. கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடுறாங்க.." என்று கலாய்த்து வருகின்றனர். சிலர் சதி கோட்பாடுகளை இழுத்து வைத்து, "இது ஹாலிவுட் ஸ்டைல் ட்விஸ்ட்!" என்று விமர்சித்து சிரிக்கின்றனர். மலையாளத் திரைப்படம் "பிரேமாலு" மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற மமிதா பைஜு, சமீபத்தில் வெளியான "டியூட்" திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் இந்தக் கதையைப் பகிர்ந்தார். "என் அம்மா, அப்பா எனக்கு ‘நமிதா பைஜு' என்று பெயர் வைத்திருந்தாலும், பிறப்புச் சான்றிதழில் தவறாக ‘மமிதா பைஜு' என எழுதியிருந்தார்கள். அதைப் பெற்றோர்கள் கவனிக்கவில்லை. ஸ்கூலில் சேரும்போது ...