கணவன் லேப்டாப்பில் கண்ட காட்சி.. அதிர்ந்து போன பெண் மருத்துவர்.. எடுத்த குலை நடுங்க வைக்கும் முடிவு..
சென்னை, ஆகஸ்ட் 19, 2025: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது மருத்துவர் ஜோதீஸ்வரி, சென்னை பெருங்களத்தூரில் உள்ள அக்காவின் 12 மாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின விடுமுறையையொட்டி அக்காவைப் பார்க்கச் சென்றிருந்த ஜோதீஸ்வரி, மாலையில் வீடு திரும்புவதாகக் கூறிவிட்டு, மொட்டை மாடிக்குச் சென்று இந்த முடிவை எடுத்துள்ளார். இவரது கைப்பையில் கிடைத்த உருக்கமான கடிதம், தற்கொலைக்கான காரணத்தை வெளிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.ஜோதீஸ்வரி, எம்பிபிஎஸ் படித்து, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் யோதீஸ்வரனை திருமணம் செய்து, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வசித்து வந்தார். அங்கு அவர் உள்ளூர் மருத்துவமனையில் பணிபுரிந்தார். ஆனால், திருமணமான மூன்று மாதங்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அடிக்கடி சண்டை ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து, ஜோதீஸ்வரி சென...