இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி.. படிக்கட்டுக்கு அடியில் உயிருடன் மீட்பு.. பகீர் தகவல்..!
Newyork : இரண்டு ஆண்டுகள் முன்பு, நியூயார்க் மாநிலத்தின் ஸ்பென்சர் நகரில், ஆறு வயது சிறுமி "பெய்ஸ்லி" வீட்டிலிருந்து மாயமானாள். அவளது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் வந்து விசாரித்தது. பொதுவாகவே எந்த வழக்காக இருந்தாலும் விசாரணையின் நடுவில், அல்லது இறுதியில் தான் ட்விஸ்ட் இருக்கும். ஆனால், இந்த வழக்கில் ஆரம்பமே பயங்க ட்விஸ்ட். புகார் கொடுத்த பெய்ஸ்லி-யின் உண்மையான தாய் இல்லை.பெய்ஸ்லி-யின் உயிரியல் தாய் என்றால்அது, கிம்பர்லி கூபர் (33) தான். பெய்ஸ்லி தத்தெடுக்கப்பட்டாளோ அல்லது விவாகரத்து சிக்கல் காரணமாகஅவள் தந்தையுடன் வளர வேண்டும் என கோர்ட் தீர்ப்பு கொடுத்ததோ என்று நமக்கு தெரியவில்லை. இதை அறிந்த போலீஸ்,பெய்ஸ்லி-யின் உண்மையான தாய்கிம்பர்லி கூபர் தான்பெய்ஸ்லிகடத்தியிருக்க வேண்டும் எந்த சந்தேகமடைந்தனர். உத்தரவுப்படி,கிம்பர்லி கூபர்பெய்ஸ்லியை வளர்க்க உரிமைஇல்லாதவர்கள். கிம்பர்லி கூபரைபோலீஸ் பலமுறை விசாரித்தது. "அவளைப் பார்க்கவில்லை, தெரியவில்லை" என்று ஒவ்வொரு முறையும் தவறாமல் சொன்னாள். ஆனால் உண்மை, ஒரு இரகசியமான இடத்தில் மறைக்கப்பட்டிருந்தது. 180 மைல் தொலைவில், சா...