Posts

Showing posts with the label Pattaasu Tamil Movie

தர்பார் vs பட்டாஸ் : மாமனார் மருமகன் வசூல் வேட்டை - மாஸ் வசூல் விபரம்..!

Image
2020-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியான இரண்டு புதிய படங்கள் தர்பார், பட்டாஸ். இந்த இரண்டுமே ஒரே வீட்டு பிரபலங்களின் படங்கள் மாமனார், மருமகன் என 2020 பொங்கல் பணடிகையை ஆக்கிரமித்து விட்டனர். அவர்களது குடும்பத்தை தாண்டி அவரது ரசிகர்கள் இப்படங்களை தாறுமாறாக கொண்டாடி வருகிறார்கள். தர்பார் படம் 9 நாட்களிலும், தனுஷின் பட்டாஸ் 3 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளன. ஆனாலும் போட்டிக்கு என்ற படமும் இல்லாததால் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. சரி, இப்போது சென்னையில் மட்டும் இப்படங்களின் இதுவரையிலான வசூல் விவரத்தை பார்ப்போம்.     தர்பார்- ரூ. 11.85 கோடி ( 9 நாள் முடிவில் )     பட்டாஸ்- ரூ. 1.41 கோடி ( 3 நாள் முடிவில் ) பொதுவாகவே, ஒரு படம் சென்னையில் என்ன வசூல் செய்கிறதோ அதனை பத்தால் பெருக்கினால் என்ன தொகை வருகிறதோ அதுவே ஒட்டு மொத்த தமிழகத்தில் வசூல் என்பது எழுதப்படாத விதி. அந்த விதி தர்பார் விஷயத்திலும் நிருபிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் 113 கோடி ரூபாயை ஒன்பது நாளில் வசூல் செய்துள்ளது...

"கொஞ்சம் கூட போர் அடிக்கல - தெறிக்கும் க்ளைமாக்ஸ்" - பட்டாஸ் படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க.? - வாங்க பாக்கலாம்

Image
எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் அப்பா, மகனாக நடித்துள்ள பட்டாஸ் படம் இன்று ஜனவரி 15 பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.  அப்பா தனுஷிற்கு ஜோடியாக நடிகை சினேகா, மகன் தனுஷிற்கு ஜோடியாக இளம் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்று வழங்கியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பாடல்கள் ஏற்கனவே செம ஹிட். பெரிதாக எதிர்பார்க்கப்படும் பட்டாஸ் திரைப்படம் ரஜினியின் தர்பார் படத்திற்கு போட்டியாக களம் இறங்கியதில் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  பட்டாஸ் படத்தின் தயாரிப்பாளர் வேறு யாருமில்லை பேட்ட படத்திற்கு போட்டியாக விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்த அதே சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான்.  இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் முழு விமர்சனத்தை பார்பதற்கு முன்னர், இந்த பார்த்த ரசிகர்கள் அவரவர் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொண்ட தகவல்களை இங்கே பார்க்கலாம். 1st half முடிஞ்சது செம்ம intervel block🔥 , காமெடி சீன...

வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் - வெளியானது பட்டாஸ் படத்தின் சிங்கிள் ட்ராக்..!

Image
கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கியது.  புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  கடந்த ஜூலை மாதத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்த படக்குழு தற்போது படத்தின் முதல் பாடல்சற்று முன் வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல்,

விஜய் படம் வந்தால் என்ன..? தீபாவளிக்கு எங்க படம் வந்தே தீரும்..! - பிரபல தயாரிப்பு நிறுவனம் அதிரடி..!

Image
தமிழ் சினிமாவின் வெளியீட்டு நாட்களில் முக்கியமான நாள் தீபாவளி நாள். அந்தத் தினத்தில் படங்கள் வெளிவருவது திரையுலகில் உள்ள பலருக்கும் பிடிக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடிக்கும் 'பிகில்' படம் வெளியாக உள்ளதாக முன்னரே சொல்லிவிட்டார்கள்.  தமிழ்நாட்டில் உள்ள 1000 தியேட்டர்கள் முழுவதும் அந்தப் படத்தை வெளியிட வாய்ப்பில்லை. எனவே, வேறு சில படங்களும் வெளியாகும். இருந்தாலும் 'பிகில்' படத்திற்குப் போட்டியாக படத்தை வெளியிட பலரும் தயங்குவார்கள்.  இந்நிலையில் தனுஷ், மெஹ்ரின் நடிக்கும் 'பட்டாஸ்' படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கலுக்கு ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திற்குப் போட்டியாக சத்யஜோதி நிறுவனம் தயாரித்த 'விஸ்வாசம்' படம் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது.  அந்நிறுவனம் தான் 'பட்டாஸ்' படத்தையும் தயாரிக்கிறது. ரஜினிக்குப் போட்டியாகவே படத்தை வெளியிட்ட வெற்றியும் நல்ல வசூலையும் பெற்றவர்கள். இதனால், விஜய் படம் வந்தால் என்ன..? என்ற படத்தை வெளியிட எந்தத் ...

தனுஷ் பெயருக்கு முன் "பட்டாஸ்" படத்தில் புதிய பட்டம் - ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா..?

Image
வெற்றிமாறன் இயக்கும் அசுரன், துரை.செந்தில் குமார் இயக்கும் பட்டாஸ் என்ற இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.  இந்த பட்டாஸ் படத்தில் தனுசுடன் சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.  மேலும் இதுவரை தனுஷ்-ஆக மட்டுமே இருந்து வந்தவர், தனது 36வது பிறந்த நாளான இன்று முதல் இளைய சூப்பர் ஸ்டாராகியிருக்கிறார்.  அதனால் தீபாவளிக்கு வெளியாகும் இந்த பட்டாஸ் படத்தில் தனுஷின் பெயருக்கு முன்பு "இளைய சூப்பர் ஸ்டார்" என்ற பட்டமும் இடம்பெறப்போகிறதாம்.ரசிகர்கள் இதைஏற்றுக்கொள்வார்களா..? என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

பிகில் வசூலுக்கு பட்டாசு வைத்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு - சூடு பிடித்த தீபாவளி ரேஸ்..!

Image
‘தெறி’, ‘மெர்சல்’ என விஜயை வைத்து இரண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக ‘பிகில்’ மூலம் விஜயுடன் இணைந்திருக்கிறார்.  தீபாவளி வெளியீடாக உருவாகி வரும் இப்படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.  அதனால், இந்த படமும் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டமாக அமைவது உறுதியாகியுள்ளது.இந்த தீபாவளிக்கு பிகில் படம் சோலோ ரிலீஸ் என்று தான் பலரும் கணித்து வந்தார்கள்.  ஆனால், இப்போது நடிகர் தனுஷின் அடுத்தபடமான "பட்டாசு" திரைப்படமும் தீபாவளி ரேஸில் கலந்து கொண்டிருகின்றது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை "பட்டாசு" படக்குழு வெளியிட்டுள்ளது.