தவறு மேல் தவறு! பெரும் சிக்கலில் விஜய்! இதை கூடவா சொல்லிக்கொடுக்க ஆள் இல்ல!
சென்னை, ஏப்ரல் 5, 2026 : தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவரும், நடிகருமான ஜோசப் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரு வேட்புமனுக்களிலும் வயது, குற்ற வழக்குகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் பெரம்பூர் தொகுதி வேட்புமனு நிராகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருந்த நிலையில், விஜய் தரப்பு கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து சிக்கலைத் தீர்த்துள்ளது. எனினும், இந்தச் சம்பவம் அவரது அரசியல் அறிமுகத்தின் முதல் கட்டத்திலேயே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முரண்பாடுகளின் விவரம் மார்ச் 30-ம் தேதி பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது, விஜய் தனது வயதை 52 எனக் குறிப்பிட்டார். மேலும், தன்மீது எந்தக் குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தார். ஆனால், ஏப்ரல் 2-ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில் வயதை 51 எனக் குறிப்பிட்டார். அதேபோல், தன்மீது இர...