சிம்பு, தனுஷ் கூட பரவாயில்ல திடீர் தளபதிக்கு தான் இடியாப்ப சிக்கல்.. தொக்காக சிக்கிய SK.!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம், தமிழ் சினிமாவையும் அரசியல் வட்டாரங்களையும் உலுக்கியுள்ளது. இந்த ஊழல் பணத்தில் Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை (ED) கண்டறிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாகவும், அவருக்கு ED சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகாஷ் பாஸ்கரன், தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, மற்றும் சிம்புவின் STR 49 ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். இவர், தனுஷுக்கு ரூ.40 கோடி, சிம்புவுக்கு ரூ.15 கோடி, மற்றும் சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி படத்திற்காக ரூ.25 கோடி ரொக்கமாக முன்பணமாக வழங்கியதற்கான ஆதாரங்களை ED கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ரொக்கப் பண பரிவர்த்தனைகள், வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி படத்திற்காக ரூ.70 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், இதில் பாதி பணமாகவும், மீ...