Posts

Showing posts with the label DMK flag

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்! விபத்து ஏற்படுத்தியவரை விடுவிடுத்த ஆய்வாளர்!

Image
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மோச்சேரி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (25) என்பவரின் மனைவி மோனிகா (21), நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.  மருத்துவப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, இருவரும் இருசக்கர வாகனத்தில் (மொப்பெட்) மதுராந்தகம் நோக்கி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி அதிவேகத்தில் வந்த எல்6 (L6) கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, வாசுதேவன்-மோனிகா சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.  இருசக்கர வாகனம் சாலையில் தீப்பற்றி எரிந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோனிகா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த கரு குழந்தையும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தை ஏற்படுத்திய காரை பின்னால் வந்த மற்றொரு கார் ஓட்டுநர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தார். அந்த காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாகவும், காரின் டேஷ் கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை மதுராந்தகம் காவல் ஆய்வ...