“முதலிரவில் கணவன் மரணம்” மனைவி சொன்ன கண்றாவி காரணம்! திருமண வீடியோவில் சிக்கிய ஆதாரம்!
மிசோரம் மாநிலத்தின் அமைதியான கிராமம் ஒன்றில் நடந்த திருமணம் மகிழ்ச்சியான நிகழ்வாகத் தொடங்கியது. இளைஞர் ஜோராம்டிந்தாரா (Zoramdinthara) என்ற இளைஞருக்கும், வான்லால்ருவாதி (Vanlalruati) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் ஏற்பாடுகளைச் செய்தனர். திருமண விழா பிரமாண்டமாக நடைபெற்றது. உறவினர்கள், நண்பர்கள் கூடி ஆரவாரம் செய்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த முதல் இரவு பயங்கரமான முடிவை நோக்கி நகர்ந்தது. திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதியர் தங்கள் அறைக்குச் சென்றனர். வான்லால்ருவாதி தன் கணவருக்கு பால் கொடுத்தாள். அந்த பாலில் தூக்க மாத்திரை கலந்திருந்தது என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. ஜோராம்டிந்தாரா சீக்கிரமே தூக்கத்தில் ஆழ்ந்தார். நள்ளிரவு நேரம். திடீரென அறையிலிருந்து அலறல் ஒலி எழுந்தது. “உதவி! உதவி!” என்று கதறிய மணப்பெண் வான்லால்ருவாதி உறவினர்களை அழைத்தாள். “அவருக்கு உடல்நிலை சரியில்லை, மயங்கி விழுந்துட்டார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்!” என்று அழுதபடி கூறினாள். உறவினர்கள் அவசரமாக ஜோராம்டிந்தாராவை மருத்துவ...