அறிவித்தார் EPS! களமே புரண்டது! தவெகவுக்கு மெகா சர்ப்ரைஸ்!
சென்னை: நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனித்து அதிக இடங்களில் (108) வெற்றி பெற்ற நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், எந்தக் கட்சியின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.இந்த ட்வீட் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சில ஊகங்கள் மற்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்தக் கூற்றுக்கு இந்தப் பதிவு முற்றுப்புள்ளி வைப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தவெகவுக்கு சாதகமான சமிக்ஞை தவெக தலைவர் நடிகர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரும்பான்மைக்கு (118) சற்று குறைவான இடங்களுடன் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட சில ஆதரவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலைய...