Posts

Showing posts with the label Lokesh Tamilselvan

தவெக-வில் இணைந்த அதிமுகவின் அதிமுக்கிய புள்ளியின் மகன் "முதுகில் குத்தப்பட்டேன்.." பரபரப்பு பேட்டி

Image
முன்னாள் சட்டமன்ற சபாநாயகரும், தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அவர்களின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிமுகவிலிருந்து விலகி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இல் இணைந்துள்ளார். இந்த நிகழ்வு அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் தமிழ்ச்செல்வன், சேலத்தில் பிறந்தவர். அவர் பி.காம் மற்றும் எம்பிஏ பட்டதாரி ஆவார். தொழில்முறையில் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். அதிமுகவில் அவர் ஐடி பிரிவு அவிநாசி தொகுதி பொறுப்பாளர் மற்றும் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்து வந்தார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட லோகேஷ், மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அத்தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பெற்றார். லோகேஷுக்கும் முருகனுக்கும் இடையே சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசம் மட்டுமே இருந்தது. இது அதிமுகவினருக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது தந்தை தனபால் எம்எல்ஏவா...