முடிவுக்கு வந்த 23 ஆண்டு மர்மம்! நடிகை பிரதியுஷா இறந்தது எப்படி? வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை!
நடிகை பிரத்யுஷா மரண வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த இந்தத் தீர்ப்பு தென்னிந்திய திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 1999ஆம் ஆண்டு மனுநீதி படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமான பிரத்யுஷா, பிரபு, விஜயகாந்த், ராமராஜன், பாரதிராஜா போன்ற பிரபல நடிகர்களுடன் சூப்பர் குடும்பம், தவசி, பொன்னான நேரம், கடல் பூக்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். திரைப்பட வாழ்க்கையில் இருந்தபோதே சித்தார்த் ரெட்டி (G. Siddhartha Reddy) என்பவருடன் காதல் கொண்டார். ஆனால், சித்தார்த்தின் குடும்பத்தினர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த இருவரும் 2002 பிப்ரவரி 24ஆம் தேதி விஷமருந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 22 வயதான பிரத்யுஷா உயிரிழந்தார். சித்தார்த் உயிர் பிழைத்தார். வழக்கை சிபிஐ விசாரித்தது. பின்னர், 2011இல் ஆந்திர உயர் நீதிமன்றம் சித்தார்த்துக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது (முன்பு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தண்டனையை குறைத்தது). இதை எதிர்த்து சித்தார்த்தும், பிரத்யுஷாவின் தாயார் சரோஜினி த...