"விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.." - நடிகை திவ்யா உன்னி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!
மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர் திவ்யா உன்னி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த திவ்யா உன்னி, டாக்டர் சுதிர் சேகர் என்பவரை கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இதனிடையே கடந்த இருவரிடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு முதல் கணவர் டாக்டர் சுதீரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார் திவ்யா உன்னி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் விவாகரத்து பெற்று தன்னுடைய குழந்தைகளை தன்னுடனே அழைத்து வந்துவிட்டார். பிறகு 2018-ம் ஆண்டு ஹூஸ்டனில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவரை மறுமணம் செய்துக்கொண்டார். திவ்யா உன்னிக்கு ஏற்கனவே அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 3வது முறையாக கர்ப்பமானார். முதல் கணவருடன் திவ்யா உன்னி திவ்யா உன்னிக்கு அவரது இரண்டாவது கணவர் பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய போட்டோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த திவ்யா உன்னி, கடந்த 14ம் ...