குடி போதையில் இருந்த சிறுமியின் தாய்! இருவருக்கும் இடையே.. கோவை சிறுமி சம்பவத்தில் அதிர வைக்கும் திருப்பம்!
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழங்க வேண்டும், என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு பெண் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் என்ன?கடந்த மே 21 அன்று மாலை 5 மணியளவில் சூலூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி (வகுப்பு 5 மாணவி) காணாமல் போனார். மாலை 8.30 மணிக்கு பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அடுத்த நாள் (மே 22) கன்னம்பாளையம் குளத்துக்கு அருகே தென்னைத் தோப்பில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலில் பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகள் இருந்ததாக போலீஸ் தெரிவித்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் (33, நாகப்பட்டினம்) மற்றும் அவருக்கு உதவிய மோகன்ர...