தவெக தலைமை அலுவலக வாசலில் தே.மு.தி.க-வினர் செய்த செயல்! வெடித்த சர்ச்சை!
தமிழ்நாட்டில் கோடை காலங்களில் பொதுமக்களுக்கு நிவாரணமாக, அரசியல் கட்சிகள், ரசிகர் மன்றங்கள் மற்றும் இயக்கங்கள் தண்ணீர் பந்தல்கள் அமைப்பது வழக்கமாக உள்ளது. இந்த பந்தல்கள், தாகத்தை தணிக்கும் சேவையை விட, அவற்றை அமைத்தவர்களின் விளம்பரத்திற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்திற்கு வெளியே தண்ணீர் பந்தல் அமைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைமை அலுவலகத்திற்கு வரும் நடிகர் விஜயின் ரசிகர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் குடிநீர் வசதி கூட ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டும் வகையில், விஜயகாந்த் ரசிகர் ஒருவர், தவெக அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு அருகே, கேப்டன் விஜயகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரின் படங்களுடன் ஒரு தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார். இந்த பந்தலில், “உன்னை தேடி வருவோர்க்கு முதலில் தண்ணீர் கொடு” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பது, சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு, தவெகவ...