பாடகி சின்னப்பொண்ணு விபத்தில் சிக்கி இறந்து விட்டார் என பதறிய கனிமொழி..நெகிழ்ச்சி சம்பவம்..!
பிரபல பாடகி சின்னப்பொண்ணு விபத்தில் சிக்கி இறந்த நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு என்கிற செய்தியை கேட்டதும் கனிமொழி அவர்கள் செய்த நெகிழ்ச்சியான விஷயத்தைப் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். பிரபல நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு அவர்கள் தற்போது நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசியவர் ஒரு முறை நாட்டுப்புற நலவாரிய பணிகளை முடித்துக்கொண்டு தஞ்சை திரும்பிக் கொண்டிருந்தோம். விபத்தில் சிக்க மரணம்? அப்போது நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நானும் என் கணவரும் செத்துப் பிழைத்தோம். நாங்கள் இருவரும் விபத்தில் இறந்து விட்டதாகவே தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. அந்த அளவுக்கு ஒரு பெரிய விபத்தாக இருந்தது. இது கனிமொழி அவர்களின் கவனத்திற்கு செல்லவே.. உடனே ஆட்களை அனுப்பி சின்ன பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க என்று சொன்னார். அவர்கள் விஷயம் தெரிந்து மருத்துவமனைக்கு வந்து எங்களுக்கு ஏற்பட்ட காயம் குறித்து கனிமொழி அவர்களிடம் கூறினார்கள். உடனே சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு போன் செய்து சின்ன பொண்ணுக்க...