Posts

Showing posts with the label Navjot Sidhu

முற்றிய கேன்சர்.. மரணத்தின் வாசல் வரை சென்றவரை பிழைக்க வைத்த வேப்பிலையும் மஞ்சளும்.. அதிர்ச்சியில் மருத்துவ உலகம்!

Image
சென்னை, அக்டோபர் 5 : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவஜோத் சிங் சித்து, தன் மனைவி நவஜோத் கௌரின் ஸ்டேஜ் 4 மார்பக புற்றுநோயை இயற்கை முறைகளால் முழுமையாக குணப்படுத்தியதாகக் கூறி தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். "மருத்துவர்கள் 3% உயிர் வாய்ப்பு மட்டுமே உள்ளதாகக் கூறியபோது, மஞ்சள், வேப்பிலை போன்ற இயற்கை பொருட்கள் தான் அற்புதத்தைச் செய்தன" என அவர் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார். இந்தக் கூற்றுக்கு பல புற்றுநோய் நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நவஜோத் கௌர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்டேஜ் 4 மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் முற்றிய நிலையில், மருத்துவர்கள் "குணப்படுத்த முடியாது; உயிர் பிழைக்க வாய்ப்பு 3% மட்டுமே" எனக் கூறியதாக சித்து தெரிவித்தார். இருப்பினும், மனம் தளராமல், தன் மனைவியை அன்புடன் கவனித்துக்கொண்ட சித்து, இயற்கை முறைகளைப் பரிந்துரைத்தார். தினசரி எலுமிச்சை சாறு, மஞ்சள், வேப்பிலை, துளசி உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்து வந்ததாக அவர் கூறுகிறார். "ஒவ்வொரு நாளும் விடியும் போ...