Posts

Showing posts with the label obscene images

மிஸ்டுகால் உறவு.. இரவல் அண்ணன்.. இம்சை வில்லனாக மாறிய கொடூர சம்பவம்..!

Image
தூத்துக்குடி : தவறுதலாக அழைத்த செல்போன் அழைப்பு 'அண்ணன்-தங்கை' உறவை உருவாக்கியது என்பது போல் தொடங்கி, காதல் மறுப்புக்கு ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி பழிவாங்கிய சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கங்காபுரம் பட்டியூரைச் சேர்ந்த 28 வயதான மஞ்சுநாதன் என்பவர், சைபர் குற்ற வழக்கையில் தூத்துக்குடி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மஞ்சுநாதன், தனது நண்பருக்கு அழைப்பு விடுத்தபோது தவறுதலாக அது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் பகுதியில் வசிக்கும் திருமணமான இளம் பெண்ணின் செல்போனுக்கு சென்றது. அழைப்பை எடுத்துப் பேசிய இளம் பெண்ணின் குரலை உணர்ந்ததும், மஞ்சுநாதன் தவறுதலாக அழைத்துவிட்டதாக விளக்கி, "என்னை ஒரு சகோதரனாகக் கருதி மன்னித்துவிடுங்கள்" என்று கூறினார். இந்த மரியாதையான பேச்சுக்கு ஆச்சரியமடைந்த பெண், அவரை 'அண்ணன்' என்று அழைத்து பாராட்டினார். அடுத்தடுத்த நாட்களில், செல்போன் உரையாடல்கள் மூலம் 'அண்ணன்-தங்கை' உறவு...