Posts

Showing posts with the label Diwali sales

ஏறிய வேகத்தில் சரிந்த தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு குறையும் தெரியுமா..?

Image
சென்னை, நவம்பர் 14 : உலகளாவிய அரசியல், பொருளாதார மாற்றங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் டாலர் மதிப்பு ஆகியவற்றின் தாக்கத்தில் தங்க விலை நாள்தோறும் ஏற்ற இறக்கம் காட்டி வருகிறது. 2025 தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து ரூ.99,000-ஐ தொட்ட தங்கம், தீபாவளிக்குப் பின் மெல்ல குறைந்து வந்த நிலையில், நேற்று (நவம்பர் 13) ஒரே நாளில் ரூ.2,400 அதிகரித்து அதிர்ச்சியளித்தது. இந்நிலையில், இன்று (நவம்பர் 14) சற்று அமைதியடைந்து ரூ.480 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தங்க விலையின் இந்த ஏற்ற இறக்கம் சாமானிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியது. 2025 தொடக்கத்தில் ரூ.99,000-ஐ தொட்ட விலை, நகை வாங்குவதைப் பற்றி யோசிக்கவே முடியாதென்ற எண்ணத்தை மக்களிடம் தோற்றுவித்தது. இருப்பினும், தீபாவளிக்குப் பின் விலை மெல்ல குறைந்து, நகை வாங்குவோருக்கு நம்பிக்கை அளித்தது. ஆனால், அவ்வப்போது ஏறும் விலை, நேற்று காலை முதல் மாலை வரை ரூ.2,400 உயர்ந்து சென்னையில் சவரன் தங்கத்தின் விலையை ரூ.95,200-ஆக...