Posts

Showing posts with the label dollar diversification

இனி தங்கம் விலை உயர்வை யாராலும் கட்டுப்படுத்த முடியாது! 2026 இறுதிக்குள் விலை இந்த உச்சத்தை எட்டும்?

Image
சீன மத்திய வங்கி தொடர்ந்து 15ஆவது மாதமாக தங்கம் வாங்கி வருவது உலக தங்க சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டிய பிறகு சற்று சரிந்து, தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவின் இந்த தொடர் கொள்முதல் தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சைனா (PBOC) வெளியிட்ட தகவலின்படி, 2026 ஜனவரி மாத இறுதியில் சீனாவின் தங்க இருப்பு 74.19 மில்லியன் ஃபைன் டிராய் அவுன்ஸாக உயர்ந்துள்ளது. இது டிசம்பர் 2025 இறுதியில் 74.15 மில்லியன் ஃபைன் டிராய் அவுன்ஸாக இருந்ததை விட சற்று அதிகம் (சுமார் 40,000 அவுன்ஸ் கூடுதல்). இதன்மூலம் சீனாவின் தங்க இருப்பின் மதிப்பு டிசம்பர் மாத இறுதியில் சுமார் 319 பில்லியன் டாலராக இருந்தது, ஜனவரி மாத இறுதியில் 369.58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சீனா உள்ளிட்ட பல மத்திய வங்கிகள் தங்கள் இருப்புகளில் தங்கத்தின் பங்கை அதிகரித்து வருகின்றன. அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைத்து, பொருளாதார மற்றும் புவிசார் அபாயங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக இந்த போக்கு வலுப்பெற்...