எனக்கு வலிக்குது சார்.. அது வேணாம்.. மாணவியிடம் ஆசிரியர் ஆபாச பேச்சு! காது கூசும் ஆடியோ!
கொல்கத்தாவில் ஒரு கல்லூரி ஆசிரியர் மாணவியிடம் தொலைபேசியில் தகாத முறையில் பேசியதாகப் புகார் எழுந்தது. மாணவி அந்த உரையாடலைப் பதிவு செய்து காவல் நிலையத்தில் முறையிட்டார். அதைத் தொடர்ந்து ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி ரியா பானர்ஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) படித்து வந்த கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவர் சுமன் முகர்ஜி. பாடம் தொடர்பான சந்தேகங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூறி அவர் மாணவியைத் தொலைபேசியில் அழைப்பது வழக்கம். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய பேச்சு படிப்படியாக எல்லை மீறியதாக மாணவி உணர்ந்தார். பள்ளியில் அத்துமீறி நடந்து கொள்வது. வலி ஏற்படும் அளவுக்கு தகாத முறையில் சீண்டுவது என செய்து வந்துள்ளார். வலிக்குது சார், இப்படி செய்ய வேண்டாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. பயமும் சங்கடமும் ஏற்பட்டதால் ரியா அவர் பேசும் தொலைபேசி அழைப்புகளைப் பதிவு செய்தார். நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் ஆலோசித்த பிறகு அவர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராகிப் புகார் அளித்தார். பதிவு செய்யப்பட்ட ஆடியோவை ஆதாரமாகச் சமர்ப்பித்தார். காவல்...