தளபதி64 குறித்து நடிகர் விஜய் எடுத்துள்ள முடிவு..! - ஜெயிப்பாரா..???
விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தளபதி63 இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவருகிறது. அட்லீ இயக்கிவரும் இந்த படத்தினை முடித்த பிறகு மோகன்ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. தளபதி64 என அழைக்கப்படும் இந்த படத்தை தானே தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம் நடிகர் விஜய். தற்போது, இந்த தகவல்தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் வைத்துள்ள தயாரிப்பு நிறுவனம் தான் அதை தயாரிக்கிறது. கடைசியாக விஜய் சொந்த தயாரிப்பில் நடித்தது ஆதி படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.