A.I பெரிய பிரச்சனை.. கீர்த்தி சுரேஷ் பார்த்து பயந்துபோன அந்த வீடியோ இது தான்..!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் ஒரு பேட்டியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்து தனது ஆழமான பயத்தையும், பதட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, நடிகைகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பயன்படுத்தி ஆபாசமாகவும், அவமானகரமாகவும் மாற்றி சமூக வலைதளங்களில் பரப்புவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை விழாவில் அவர் தாவணி சேலை அணிந்து கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களில், அவரது ஆடைகளை விலக்கி உடலை வெளிக்காட்டுவது போலவும், அருகில் நின்ற விஜய் தேவரகொண்டாவுக்கு உதட்டில் முத்தமிடுவது போலவும் மிகவும் யதார்த்தமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இதுகுறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், "இந்த வீடியோக்களைப் பார்த்தால், நாமே ஒரு நிமிடம் ...