Posts

Showing posts with the label property conflict

காட்டுக்குள் இறந்து கிடந்த பெண்.. விசாரணையில் வெளியான கொடூரர்களின் பின்னணி..

Image
பர்கூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்), டிச. 1: சொத்து தகராறு காரணமாக 56 வயதுப் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் மூன்று பேரை பர்கூர் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஐகுந்தம் கொத்தப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மேல்சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி கோவிந்தம்மாள் (வயது 56).  கூலித் தொழிலாளியான இவர் கடந்த 25-ம் தேதி ஊரக வேலைத்திட்டப் பணிக்காக பெரியமலை அடிவாரத்தில் உள்ள பண்ணைக் குட்டை அமைக்கும் இடத்திற்குச் சென்றிருந்தார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை மலை அடிவாரத்தில் அவரது உடல் ரத்த வெறிய உடையில் மர்மமான முறையில் கிடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பர்கூர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு அறிக்கையில் கோவிந்தம்மாள் கட்டையால் தாக்கப்பட்டும் கழுத்து நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டது உறுதியானது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின்படி, துணை கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் இளவரசன் (பர்கூர்), அன்பழகன் (நாகரசம்பட்டி) தலைமையிலான தனிப்படை அமைக...