தன் காதலியை 49 வயது ஹோட்டல் உரிமையாளருக்கு கூட்டி கொடுத்த காதலன்.. 18 வயசு பெண்ணுக்கு வந்த விபரீத ஆசை..
சென்னை/மலப்புரம் : கேரளாவின் மலப்புரம் மாவட்டம் திரூரைச் சேர்ந்த வியாபாரியும் ஹோட்டல் உரிமையாளருமான சித்திக் (58) கொலை செய்யப்பட்டு, உடல் துண்டுகளாக்கப்பட்டு டிராலி பையில் தூக்கி எறியப்பட்ட நிலையில் அட்டப்பாடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர கொலை சம்பவத்தில் தொடர்புடைய இருவரை தமிழக போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் ஹோட்டலில் பணிபுரிந்த ஷிபிலி (22) மற்றும் அவரது காதலி ஃபர்ஹானா (18) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது தமிழக போலீசாரின் காவலில் சென்னையில் உள்ளனர்.சித்திக்கின் மகன் தந்தை காணாமல் போனதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அத்துடன் சித்திக்கின் ஏடிஎம் கார்டு மற்றும் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கொலை கோழிக்கோடு எரஞ்சிப்பாலம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அங்கு சித்திக்கை கொன்ற பிறகு, உடலை வெட்டி துண்டுகளாக்கி அட்டப்பாடியில் உள்ள கொக்கையில் தூக்கி எறிந்துள்ளனர். உடலின் சில பகுதிகள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.மலப்புரம் எஸ்பி தலைமைய...