சிறை கைதியுடன் தகாத உறவு.. வசமாக சிக்கிய பெண் போலீஸ்.. விசாரணையில் வெளியான வினோத காரணம்..!
லண்டன் : இங்கிலாந்தின் வெஸ்ட் யார்க்ஷயரில் உள்ள HMP வெதர்பி (Weatherby) ஆண்கள் சிறையில் பணியாற்றிய பெண் சிறை அதிகாரி ஒருவர், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருடன் பலமுறை தகாத உறவில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகிய நிலையில், விசாரணையில் போதைப்பொருள் கடத்தியதும் உறுதியானதால், அந்த அதிகாரிக்கு லீட்ஸ் கிரவுன் கோர்ட் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர் 29 வயதான மேகன் கிப்சன் (Megan Gibson). இவர் வெதர்பி சிறையில் பணியாற்றிய காலகட்டத்தில், அங்கு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஒரு கைதியுடன் நெருக்கமாகப் பழகியதாகக் கூறப்படுகிறது. சிறையின் உயர்பாதுகாப்பு அமைப்பு இருந்தபோதிலும், இருவரும் பலமுறை உடலுறவில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிசிடிவி காட்சிகள், சக ஊழியர்களின் சாட்சியங்கள் மற்றும் செல்போன் தகவல்கள் மூலம் கிடைத்ததாக தெரிகிறது. விசாரணையின்போது தெரியவந்த அதிர்ச்சி தகவல் மேகன் கிப்சன் அந்த கைதிக்கு சிறைக்குள் போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை ரகசியமாக வழங்கியிருக்கிறார். இதற்காக அவர் ...