சென்னை IT ஊழியரை பழிவாங்கிய 'பிசாசு'.. காதுக்குள் சீரிய பாம்பு.. அணு அணுவாக உடலில் இருந்து உயிரை எடுத்த "சத்தம்"
சென்னை மேற்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞரும், அம்பத்தூர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஷன் நாராயணன் என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோஷன் நாராயணனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றிருந்த நிலையில், அவர் வீட்டில் தனியாக இருந்தார். இன்று அதிகாலையில் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, ரோஷன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் விரைந்து வந்த போலீசார், ரோஷனின் அறையைச் சோதனை செய்தனர். அப்போது ஒரு தற்கொலைக் கடிதம் கிடைத்தது. அதில், "என் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது" என்று ரோஷன் குறிப்பிட்டிருந்தார். மேலும், குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியும் எழுதியிருந்தார். ரோஷனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செவிப்புல மாயை (Auditory Hallucination) என்றால் ...